யாழில் RDA இஞ்சுனியர் கற்கண்டு சுமந்திரன் அலுவலக நேரத்தில் ஐயனார் கோவிலடியில் செய்த அலங்கோலம்!! (Photos)
யாழ் குருநகரில் உள்ள வீதி அபிவிருத்தி சபையின் பிரதம நிறைவேற்று பொறியியலாளரான கற்கண்டு சுமந்திரனும் அவரது சாரதியும் சேர்ந்து சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் செய்த அலங்கோல வேலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான (RDA) WPGE – 0087 இலக்கமுடைய Toyata ரக வாகனம் இன்று காலை 10.30 மணியளவில் வந்து அநாதரவான நிலையில் நின்றுள்ளது.

ஐயனார் கோவில் பகுதியில் குறித்த வாகனம் நிற்பதை கண்ட சுயாதீன செய்தியாளர் ஒருவர் இது தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தத் தொடங்கினார். அலுவலக நேரத்தில் RDA வாகனம் இந்தக் கோவில் பகுதியில் வந்து நிற்கின்றது என்றால் வீதி அபிவிருத்தி வேலை தொடர்பாகத்தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க உள்ளார்கள் என கருதி சுன்னாகம் பிரதேசசபைக்கு சொந்தமான வீதிகளையும் RDA பொறுப்பெடுத்துவிட்டதா என சிந்தித்து அந்த வாகனத்தில் வந்தவர்களை தேடத் தொடங்கினார்.
ஏற்கனவே யாழ் மாநகரசபையில் வேலை செய்யும் விஜயகலாவின் அடியாளான சுரேஸ் என்பவன் சுன்னாகம் பிரதேசசபை உறுப்பினராக உள்ளான். அவன் அந்தப் பகுதியில் கமநலசேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறாமல் வயல்காணிக்குள் சட்டவிரோதமான முறையில் பிரதேசசபை காசில் ஒரு பூங்காவும் கட்டியிருந்தான். அதே போல் RDA யும் ஏதாவது செய்ய முற்படுகின்றதா என ஊடகவியலாளர் அறியமுற்பட்டு அங்கு உலாத்திய போது குறித்த RDA யாழ்ப்பாண தலைமையகத்தின் பிரதான நிறைவேற்று பொறியியலாளரான கற்கண்டு சுமந்திரன் ஒரு ஆச்சியை தோட்ட வெளிக்குள் கையைப் பிடித்தபடி அலைந்து திரிந்தார். அத்துடன் அங்கு நின்ற பெண்களையும் துாசணவார்த்தைகள் கொண்டு ஏசியதையும் அவதானிக்க முடிந்தது.
இந் நிலையில் குறித்த இஞ்சினியர் தனது கடமையை செய்ய வரவில்லை என்பதும் தனது தனிப்பட்ட நடவக்கைக்காக அங்கு வந்து நிற்பதும் அறிந்த ஊடகவியலாளர் அங்கு நின்றவர்களுடன் சேர்ந்து வாகனத்தை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது அந்த வாகனத்தின் சாரதி பலரும் பார்த்துக் கொண்டிருந்த போது பச்சைத் துாசணத்தில் ஏசியபடி வாகனத்தை புகைப்படம் எடுக்க வேண்டாம் என சண்டித்தனத்தில் ஈடுபட தொடங்கினார்.
அலுவலக நேரத்தில் வாகனத்தில் வந்து இஞ்சினியர் வயதான பெண் ஒருவரின் கையைப் பிடித்தபடி என்ன செய்கின்றார் என பொதுமக்களும் கேள்வி கேட்கத் தொடங்க வயலுக்குள் நின்ற இஞ்சினியர் ஓடிவந்து…… ”வேய்க்கிலை எடுத்துக் கொண்டு ஓடுடா…ஓடு” என கூறிய போது றைவரும் ஐயனார் கோவில் வடக்கு வீதி ஊடாக வாகனத்தை செலுத்தத் தொடங்கினார்….. இஞ்சினியரான கற்கண்டு சுமந்திரன் ஓடிச் சென்று வாகனத்தில் ஏற முற்பட்ட போதும் அது விரைவாகச் சென்ற காரணத்தால் அவரும் தனது கால்களால் விரைவாக ஓடிச் சென்று மறைந்தார்.
வயலுக்குள் இஞ்சினியர் அப் பெண்ணின் கையைப் பிடித்து திரிந்து என்ன செய்தவர் என அங்கு நின்ற போது அந்தப் பெண் இஞ்சினியரின் தாயார் எனவும் இஞ்சினியர் தனது தாயாரை வைத்து அப்பகுதியில் உள்ள வயல்கள் சிலவற்றை அடாத்தாக கைப்பற்ற முற்பட்டதாகவும் அதன் காரணமாக அந்த வயல்காரர்களுடன் சண்டைக்கு இஞ்சினியர் தனது றைவரான அடியாளுடன் அரசாங்க வாகனத்தையும் பாவித்து வந்து சண்டையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின…..
அரச அதிகாரிகளின் அடாவடியான, துஸ்பிரயோக நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கோத்தபாய அரசாங்கம் முயன்றுவரும் நடவக்கையில் அரசாங்க சம்பளம் எடுத்துக் கொண்டு அரச வாகனத்தில் அரச வேலை நாள் ஒன்றில் வயல்காணியில் இஞ்சினியர் நின்று அட்டகாசம் செய்தது பொதுமக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.



