யாழில் தனியார் நிறுவனத்துக்கு எதிராக ஏ-9 வீதியை மறித்துப் போராட்டம்! (படங்கள்)
#சம்பவம் – யாழ்.அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டித்து நல்லுார் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் இணைந்து ஏ- 9 பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
#பார்வை – போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள். இந்நிலையில் பிரசன்னமான யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவத்தை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை சீர் செய்யவும் முயற்சித்தபோது போராட்டக்காரர்கள் மக்கள் பிரதிநிதிகள் என தெரிந்துகொண்டார். இதன் பின்னர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம்இருந்து வெளிந்தோன்றிய வாசனங்கள் இவை “மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நீங்கள் தான்” நீங்கள் தான் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு மக்களுக்கு வழங்கவேண்டும்” அதற்காகதான் மக்கள் உங்களை தெரிவு செய்துள்ளனர்”
#கவனம் – காணப்படுகின்ற மருத்துவக்கழிவுகளில் இலங்கை அரச இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நிச்சயமாக இக்கழிவுகள் அரச வைத்திய சாலை கழிவுகள்தானந் என்ற முடிவுற்குள் அனைவரது கவனமும் திரும்பியுள்ளதோடு கழிவுகள் கொட்டப்படும் தருவாயில் கொண்டுவந்தவர்கள் கூறிய (சொல்லப்படுகிறது. உறுதிபடவில்லை.) கருத்துக்கு அமைவாக யாழ். போதனா வைத்தியசாலையின் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
#சந்தேகம் – கழிவுகள் ஓரிரு தினங்களுக்குள் கொட்டப்பட்டவை என்பதை விட குறித்த சில தினங்களுக்கு முன்னதாகவே கொட்டப்படுகிறது என்பதற்கான தடங்களே காணப்படுகிறது. சாதாரணமாக தோண்டப்பட்ட குழிகளில் கழிவுகள் கொட்டப்படவில்லை. பாரிய இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட பாரிய குழிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.





