புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பேஸ்புக்கில் தொடர்பு!! புலம்பெயர் இளைஞனை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்த இலங்கை யுவதி!!

வெளிநாடுகளில் தொழில் செய்யும் இளைஞர்களை இலக்கு வைத்து அண்மையில் பல்வேறு மோசடிச் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகிவருகின்றன.

ஆசை வார்த்தைகளையும், பசப்பு பேச்சுக்களையும் கூறி இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொள்வதும் அவர்களை தங்களின் வலைக்குள் வீழ்த்துவது என்று ஏராளமான தகவல்கள் பதிவாகின்றன.

அப்படியொரு மோசமான நிகழ்வு தான் இத்தாலியில் தொழில் புரியும் இளைஞருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், அவரை ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்திருக்கிறார்.

இது தொடர்பில் கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து இரண்டு தரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்திற்குள் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் மோதலுக்கு முக்கிய காரணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான இந்த இளைஞன் நீண்ட காலமாக இத்தாலியில் சேவை செய்துள்ள நிலையில் பேஸ்புக் மூலம் இலங்கையில் உள்ள இந்த பெண்ணை அறிந்து கொண்டுள்ளார். இளம் வயதுடைய யுவதி போன்று நடந்து கொண்ட இந்த பெண் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி இளைஞனை ஏமாற்றி பல முறை பணம் பெற்றுள்ளார்.

தங்கள் இருவருக்கும் வீடு கட்ட வேண்டும் என கூறி பல முறை பணம் பெற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு பணம் பெற்று கம்பளை – நுவரெலியா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை வாங்கி அதனை வாடகைக்கு வழங்கி வந்துள்ளாாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த இளைஞர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கிறார். இதனையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார், கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்திருக்கின்றார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், இணையத்தளங்களில் இதுபோன்று அதிகளவான மோசடிகள் இடம்பெற்றுவருவதாகவும், வெளிநாடுகளில் தொழில் செய்யும் இளைஞர்கள் அவதானமாக செயல்படுமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.