மட்டக்களப்பில் வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களை சீரழிக்கும் மோசடித் தம்பதிகள் இவர்கள்
மட்டக்களப்பு கழுதாவளையில் வசித்துவரும் நபர் ஒருவர் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவருவதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
வெளிநாடு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து குறித்த இருவரும் உல்லாசமாக ஊர் சுற்றி திரிவதாகவும் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் மக்களை ஏமாற்று உல்லாசம் காணும் குறித்த மோசடியாளர்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

