புதினங்களின் சங்கமம்

யாழில் ஆவா குழுக் காவாலிகள் 3 பேர் கைது!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 25ஆம் திகதி இருவர் வாள்களால் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் போது குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய மானிப்பாய் மற்றும் கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருபவதாவது,
இக்குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும், முகத்தை மறைக்கும் 04 கறுப்புத் துண்டுகளும் வண்ணாரப்பன்னை வீதியில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இக்குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.