புதினங்களின் சங்கமம்

சீனா, இலங்கைக்கு வழங்கிய அதிநவீன ரோபோ (Photos)

போதைப்பொருள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் அதிநவீன ரோபோ உபகரணமொன்றை இலங்கைக்கு சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

750 மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரத்தை சீன அதிகாரிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று இந்த உபகரணம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த உபகரணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நவீன உபகரணங்களை போதைப்பொருள் தேடுதல்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இலங்கை பாதுகாப்பு துறையினர் பயன்படுத்தும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

5 மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் நபர்கள், பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை தன்னிச்சையாக இனங்கண்டுக் கொள்ளும் வகையில் இந்த ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நபர்களின் உடல்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை தன்னிச்சையாக அடையாளம் கண்டுக்கொள்ளும் இயந்திரங்களும் இந்த ரோபோவில் பொறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பல தொழில்நுட்பங்களுடனான ரோபோ இயந்திரத்தையே சீன அரசாங்கம், இலங்கைக்கு இன்று வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 7 people, people standing and suitNo photo description available.