புதினங்களின் சங்கமம்

செம்மணியில் 600 பொதுமக்களை கொன்று புதைத்த கொடூர சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான கப்டன் லலித் ஹேவா (தற்போது ஓய்வு பெற்ற பிரிகேடியர்) தனது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடியிருக்கின்றார்

செல்வி கிரிசாந்தி கொலை வழக்கு தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சே செம்மணி புதைகுழி தொடர்பாக அடையாளம் காட்டப்பட்ட கப்டன் லலித் ஹேவா தற்போது வரை மிக சுதந்திரமாக இருக்கின்றார்

கிருசாந்தி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பான வம்பனின் சிறப்பு தொடர்

திரு அனுர குமார திசாநாயக்க அதிகாரத்திற்கு வந்த பின்னர் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து சோமரத்தின ராஜபக்சே தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கி, இவ்விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையைக் கோரி அவரது மனைவி திரு அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய, திரு ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்

குறித்த கடிதத்திலும் 7 ஆவது காலாட்படை தலைமையகத்தின் அதிகாரியாகவிருந்த கப்டன் லலித் ஹேவா தலைமையிலான அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்டு 7 ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சி*த்திரவ*தைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டதை பதிவு செய்திருந்தார்

விசேடமாக கப்டன் லலித் ஹேவாயின் ஆலோசனைக்கு அமைவாகவே காலை 9.00 மணி முதல் மாலை 4.00 – 6.00 மணி வரை நாளாந்தம் இந்த செம்மணி சோதனைச்சாவடியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் செம்மணி சோதனைச்சாவடியில் கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் சொல்லியியிருந்தார்

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாலை 4.00 மணியின் பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7 ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பதிவு செய்திருந்தார்

அங்கு பலியெடுக்கப்பட்டோர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டு பு*தைக்கபட்டதாகவும் எழுதியிருந்தார்

செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருந்ததாக விரிவாக தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்

யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல படுகொலைகள் மற்றும் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கும் எனது கணவர் தயாராக இருப்பதாகவும் தண்டனை கைதி சோமரத்தின ராஜபக்சேவின் மனைவி திரு அனுரா குமார திஸாநாயக்காவிற்கு எழுதிய கடிதத்தில் விரிவாக எழுதி இருந்தார்

ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் எனது கணவர் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள் எனவும் கேட்டு இருந்தார்

இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும் சொல்லியிருந்தார்

அதே போல சர்வதேச விசாரணையொன்றில் கூட சாட்சியமளிப்பதற்குத் கூட தனது கணவர் தயாராக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்

இந்த கடிதம் எழுதப்பட்டு 8 மாதங்கள் கடந்து விட்டது. எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை

குறிப்பாக கப்டன் லலித் ஹேவா உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வழக்குக்கு என்ன நடந்தது என்பது பற்றி கூட இன்று வரை எந்த தகவல்களும் இல்லை

மறுபுறம் 600 பேரை திட்டமிட்டு சித்தரவதை செய்து கொ*ன்ற பிரதான கொ*லையாளி குற்றச்செயல்கள் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்னரும் மிக சுந்திரமாக பிறந்த நாள் கொண்டாட அனுமதித்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றார்கள்.

Thanks
இனமொன்றின் குரல்