புதினங்களின் சங்கமம்

தமிழ் சட்டத்தரணிகளே!. உங்களிடம் தமிழனாக ஓர் வேண்டுகோள்

23-09-2019 நேற்றைய தினம் பேரினவாத தேரர்கள் நீதிமன்ற கட்டளையை பொருட்படுத்தாது செய்த அராஜகம் உங்களை இந்த கறுப்பு வெள்ளை உடைகளை களைந்து அம்மணமாக்கியதிற்கு சமமானது என்பதில் ஐயமில்லை.

மக்களுக்கு பிரச்சினை என்றால் நீதி மன்றம் வருவோம். நீதிக்காக சட்டத்தரணிகள் நீங்கள் வாதம், பிரதிவாதம் செய்வீர்கள். நீதிபதி நீதியின் வாதத்தை ஏற்று நீதி வழங்குவது என்பதே உலக நியதி ஆகும்.

நீதியின் முன் யாவரும் சமமே எனும் உலக நியதியை தகர்க்க பேரினவாத தேரர்களுக்கு யார் துனை நின்றது?

வேறு யாருமில்லை. நீதிமன்ற Law and order இனை செயல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஆகும்.

எனவே தான் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களை காவல்த்துறை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை உங்கள் போராட்டம் கைவிடப்பட்டு விடக்கூடாது என்பதே எமது வேண்டுகோள் ஆகும்.

பேரினவாத தேரர்களின் மிகைவாத அடாவடிக்கு எதிராக 24 மணி நேரத்திற்குள் அலையென திரண்ட மக்கள் கூட்டம் யாரும் காசு கொடுத்து ஒன்றினைந்தர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதித்துறை சார்ந்த நீதிமன்றம், நீதிபதி, சட்டத்தரணிகள் மீதான நம்பிக்கையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கொதித்தெழுந்த மக்கள் தான் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே தான் உரிய தீர்வு எட்டப்படும் வரை பொது மக்கள் நாம் துனை நிற்போம். உங்கள் அறவழிப் போராட்டம் தொடரட்டும்.

சட்டத்தரணிகளின் போராட்டத்திற்கு உரம் சேர்கும் வகையில் இவ் விடயத்தை copy & paste அல்லது share செய்ய மறவாதீர்கள்.

“நன்றி”

-த.கிருஷ்ணா-

மு.கு:
கடந்த நாட்களில் நடைபெற்ற மக்கள் போராட்டம் எனும் போர்வையில் அரசியல் கட்சி நலன் சார்ந்த சில போராட்டங்களுக்கு மாத, நாள் கணக்கில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்த போது கூடாத மக்கள் கூட்டம் நேற்றைய சம்பத்தில் இருந்து மக்கள் தமது உரிமை மீதான அடக்கு முறைக்கு எதிரான போராட்ட தேவையினை உணர்ந்து 24 மணி நேரத்திற்குள் மக்கள் அலையென திரண்டனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

Image may contain: one or more people, cloud, sky and outdoorImage may contain: 1 person, standing and outdoorImage may contain: 13 people, crowd and outdoor