புதினங்களின் சங்கமம்

கொழும்பின் பல பகுதிகள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன (Photos)

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கொழும்பின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை, புறக்கோட்டை, முகத்துவாரம், கிருலபனை, புளுமென்டல் உள்ளிட்ட பல பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

வர்த்தக நிலையங்கள், வீடுகள், புனித தலங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.

தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடகவியலாளர். மதன் சிவா

Image may contain: car and outdoorImage may contain: house and outdoorImage may contain: one or more people and people standingImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, outdoor and waterImage may contain: night, outdoor and waterImage may contain: people sitting and indoorImage may contain: one or more people, outdoor and water