Home புதினங்களின் சங்கமம் 2 பிள்ளைகளின் தந்தையான திருச்செல்வம் தற்கொலை!

2 பிள்ளைகளின் தந்தையான திருச்செல்வம் தற்கொலை!

மஸ்கெலியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீட்டன் பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்தார்.

குறித்த சம்பவம்நேற்று இரவு 7.00 மணியளவில் நடைபெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சீட்டன் பிரிவை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான திருச்செல்வம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக கிலங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.