புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் 47 வயது கள்ளக் காதலியால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை! மனைவியைத் தாக்கிய 36 வயது ஈழத் தமிழன் வாகீசன் கைது!

கனடாவில் அல்பேர்ட்டா (Alberta) பகுதியில் தனது மனைவியைத் தாக்கிய குற்றத்திற்காக ஈழத்தமிழனான வாகீசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். வாகீசனுக்கும் அவனது மனைவிக்கும் நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த குடும்ப முரண்பாடு முற்றி இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 47 வயதான குறித்த பகுதியில் வசிக்கும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருடன் வாகீசனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் குடும்பத்திற்கிடையில் பல நாட்களாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்ததாகத் தெரியவருகின்றது. வாகீசன் பொறுப்பாக வேலை செய்யும் நிறுவனத்தில் பாக்கிஸ்தான் பெண்ணும் பணியாற்றி வந்ததாகவும் அதனால் இருவர்களுக்குமிடையில் தகாத உறவு ஏற்பட்டதாகவும் பொலிசாரின் விசாரணைகளின் போது மனைவி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தன்னை பல தடவைகள் அச்சுறுத்தியதுடன் இறுதியில் தாக்கியதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.