புதினங்களின் சங்கமம்

யாழில் உள்ள வங்கி வெற்றிடங்களிற்கு 35 பேர் நியமனம்! யாழ் மாவட்டத்தை சேர்ந்த எவரும் இல்லை..?

தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு விடயத்தில் இரா.சம்பந்தன் மற்றும் கனடா கிளை நடந்து கொள்ளும் விதம் கூட்டமைப்பிற்குள், தமிழ் அரசு கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஏற்கனவே யாழ் போதனாசாலை சிற்றூழியர் நியமனம், சமுர்த்தி நியமனம் தொடர்பில் யாழ்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்ளீர்க்கபடாத நிலையில் தற்பொழுது யாழ் மாவட்ட அரச வங்கிககளில் திருகோணமலையை சேர்ந்த 35 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இரா.சம்பந்தனின் சிபாரிசில் குறித்த 35 பேரும் அண்மையில் நியமனம் பெற்றிருந்தாகவும் தெரிவிகபடுகின்றது.

நிதியமைச்சு அதிகாரிகள் மூலம் எப்படியோ இந்த விடயத்தை மோப்பம் பிடித்து அறிந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் தமக்குள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

இரா.சம்பந்தனின் இந்த பொறுப்பற்ற- தேர்தல் கால நடவடிக்கையால்- யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் அதிருப்தியடைந்திருந்தனர்.

இதேவேளை நேற்று முன்தினம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தமிழ் தேசியகூட்டமைப்பிற்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்ற போதே மங்கள சமரவீர இந்த தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார்.

இந்த தகவல்களால் அதிருப்தியடைந்த தமிழ் அரசுக்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்ய முயன்றபோதும் , ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை சமரசம் செய்து, உட்கார வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் உரத்த குரலில் நடந்த இந்த வாதப்பிரதிவாதங்கள் எதுவும் கேளாதவர் மாதிரி, சம்பந்தன் உட்கார்ந்திருந்ததாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.