Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் சினிமா ஹீரோ போல் சீன் போட்டவரின் ஆடரம்பர மோட்டார் சைக்கிள் கடத்தி எரிப்பு

கிளிநொச்சியில் சினிமா ஹீரோ போல் சீன் போட்டவரின் ஆடரம்பர மோட்டார் சைக்கிள் கடத்தி எரிப்பு

இலங்கை மதிப்பில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆடம்பர
மோட்டார் சைக்கிள் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
எரிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமிபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை
இனம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று எரித்துள்ளனர் என்று பொலிஸ்
விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை இனங்கண்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.