புதினங்களின் சங்கமம்பெண்கள்

நம் சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான விவாகரத்துகளுக்கு பெண்கள்தான் காரணம் என்றால் நம்புவீர்களா?

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
ஆம், இந்தத் தலைப்புக்காக நான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுவேன் என்பது தெரியும். ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
ஆண்மையுள்ள ஆண்களாக இருந்தால், வாழ்ந்து, பிள்ளைகள் பெற்று, ஒரு குடும்பத்தை கட்டியெழுப்பிய பிறகு அதனை கலைக்க முற்பட மாட்டார்கள். ஆனால் மனைவிமார்கள் பலரின் நடத்தைகள் விவாகரத்து வரைக்கு
செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறது.
👇👇👇
◼ சில மனைவிமார்கள் பணம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்க மாட்டார்கள். எப்படியாவது பணம் வீட்டில் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். ஏதோ பாதையில் பண மழை பொழிகிறது, அதிலிருந்து அவர்கள் எடுத்துக் கொண்டு வருவதாக நினைத்து விடுகின்றனர்.
◼ சில மனைவிமார்கள் தொடர்ந்து தங்கள் கணவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்
பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தனது நண்பியின் கணவன் போன்று பணத்தில், தனது சசோதரியின் கணவன் போன்ற தொழிலில் அல்லது சுற்றுச் சூழலில் இருக்கும் உறவினர்களைப் போல வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்புவார்கள்.
◼ சில மனைவிமார்கள் தங்கள் கணவர்களின் ரோசத்தை நச்சரிப்பார்கள். அதனை பிற்போக்குத்தனமாக பார்பார்கள். அதாவது அவர்கள் சூடு சுரணை அறவே இல்லாத கணவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
◼ சில மனைவிமார்கள் தங்கள் கணவர்களின் உடலியல் உளவியல் நலத்தைப் பார்க்க மாட்டார்கள். வர்களின் எதிர்பார்ப்பெல்லாம் முடிவில்லாமல் வளவளவென பேசிக் கொண்டும் குலாவிக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதாகும்.
இதனால் அந்தக் கணவன் தொடர்ச்சியான மனச்சொர்வுகள் மற்றும் உளவியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஒரு மனநோயாளியாக மாறிவிடுகிறான்.
◼ சில மனைவிமார்கள் கணவன் பேச்சுக்கு கட்டுப்பட மறுப்பார்கள். தீர்மானங்களை எடுப்பதில் ஆணைப் போல கணவனுடன்
போட்டிபோடுவாள். கணவனும் மனைவியும் வாழ வே வீட்டில் இரண்டு கணவன்மார்கள் இருப்பது போன்ற ஒரு நிலை உருவாகும்.
◼ சில மனைவிமார்கள் வேண்டுமென்றே தங்கள் கணவனின் குடும்பங்களோடு பிரச்சினைகளை உருவாக்கி, இந்தப் பிரச்சினைகளை நீண்டகால குடும்ப மோதல்களாக மாற்றுவார்கள், இதனால் கணவரை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்குவார்கள்.
◼ சில மனைவிமார்கள் சொஷியல் மீடியாக்களாலும் பெண்ணிய வாத சிந்தனைகளாலும் கவரப்பட்டிருப்பார்கள்.
ஃபேஷன் மற்றும் அழகுசாதன உலகில்
மூழ்கி இருப்பார்கள். இதனால் இவைகளை எதிர்க்கும் கணவனோடு முரண்படுவார்கள்.
🔺️🔺️🔺️
இந்த சீரழிவுகளுக்கான அடிப்படைக் காரணம் ஒழுக்க சிதைவை தூண்டும்
தமிழ் நாடகத் தொடர்கள் மற்றும் இந்திய, கொரியன் மற்றும் பிற மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட நாடகத் தொடர்கள்தான்.
நான் இங்கே ஆண்களை எல்லாம் நியாயப்படுத்த வரவில்லை. ஏராளமான ஆண்களின் பொறுப்பற்ற அல்லது தீய நடத்தைகளும் பல குடும்பங்கள் சீரழியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
அதேவைளை நவ உலகில் அதிகமான பெண்கள் உலகமயமாக்கல் வலையில்
சிக்கி தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளகிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
✍ தமிழாக்கம் / imran farook