கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு ஒர் தயவான வேண்டுகோள்!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
புதிய உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கவுள்ளதாக நீங்கள் அடித்து ஒட்டிய போஸ்ரர்கள் கிளிநொச்சியில் கலர் கலராக காட்சியளிக்கின்றன. ஓஏல் பரீட்சை இன்னும் முடியவில்லை. வருகின்ற 26 ஆம் திகதியே 2025 ஆம் ஆண்டு ஓஎல் பரீட்சை நிறைவுக்கு வருகின்றது. ஆனால் 2028 ஆம் ஆண்டுக்கான உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கவுள்ள போஸ்ரர்கள் கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ளன.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது ஒரு புறமிருக்க…
ஓஎல் பரீட்சைக்காக மிகவும் கடினமாக ஓய்வின்றி தொடர்ச்சியாக கற்ற மாணவர்கள் பரீட்சை நிறைவு பெற்றதும் கொஞ்சம் ரீலாக்ஸாக சிறிது காலம் இருக்க வேண்டியது கட்டாயமானது. அந்த காலத்திற்குள் நண்பர்கள் உறவினனர்கள் வீடுகளுக்குச் செல்லுதல், சினிமாவுக்கோ, வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலாவுக்கே, கோவில் குளங்கள் என அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அது அவர்களின் உளவியலுக்கு அவசியம்.
ஆனால் பல தனியார் கல்வி நிலையங்கள் ஓஎல் பரீட்சை முடிந்தும் முடியாததுமாக அந்த மாணவர்களுக்கான உயர்தர பிரிவை ஆரம்பிக்கின்றீர்கள்.இம்மாதம் 26 ஆம் திகதி பரீட்சை நிறைவுக்கு வரும் நிலையில் மறுநாள் தொடக்கம் உயர்தரம் வகுப்புக்கள் ஆரம்பிக்கவுள்ள அறிவிப்புக்களை வெளியிடத்தொடங்கியுள்ளீர்கள். இதுவொரு ஆரோக்கியமான நடவடிக்கை அல்ல என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீங்கள் கூறலாம் நாங்கள் எந்த பிள்ளையைம் கட்டாயப்படுத்தி வகுப்புக்கு வருமாறு அழைக்கவில்லை அவர்கள் விரும்பினால் வரலாம் இல்லை எனின் சுற்றுலா, சினிமா என எல்லாவற்றையும் முடித்துவிட்டும் வரலாம் அது அவரவர் விருப்பம் என. ஆனால் அதுவும் அந்த பிள்ளைகளுக்கு மன அழுதத்தையே ஏற்படுத்தும் பிள்ளைகள் சுற்றுலா சினிமா என சென்றாலும் மகிழ்ச்சியாக காலத்தை கழிக்க முடியாது காரணம் நீங்கள் அந்தக் காலத்தில் பாடத்திட்டங்களை படிப்பித்து சில வற்றை முடித்திருப்பீர்கள். எனவே சிலபஸ் போய்விடும் என்ற பயத்தில் அவர்கள் வேறு எங்கும் செல்ல விரும்பமாட்டார்கள்.ஓஎல் புத்தங்களையும் கொப்பிகளையும் அடுக்கி ஒதுக்கி வைக்க கூட நேரமின்றி உயர்தர வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது.
எனவே இந்த விடயத்தில் கிளிநொச்சி மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் அல்லது மாவட்டச் செயலகம் ஒரு தீர்க்கமான ஆரோக்கியமான முடிவுக்கு வரவேண்டும். மாணவர்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள் என்றாவது கால இடைவெளி வழங்க வேண்டும்.

