யாழில் படுகாவாலியும் போதைப்பொருள் விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ள அத்தானுக்கு சமாதான நீதவான் பதவி!! அதிர்ச்சித் தகவல் இதோ!
யாழில் சைக்கிள் கட்சி சார்பில் ரொலோ கட்சியல் யாழ் மாநகரசபைத் தேர்தலில் அரசடியில் போட்டியிட்டு உறுப்பினராக வந்த அத்தான் என அழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரியும் அடிதடி கட்டைப்பஞ்சாயத்து நாட்டாமையுமான துரைசிங்கம் யோகராசா யாழ் மாவட்ட நீதிமன்றில் சமாதான நீதவானாக பதவிப்பிரமாணம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் கடும் விசனத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தற்போதைய ஜே.வி.பி அரசாங்கத்தின் அசமந்த போக்கையும் இச் சம்பவம் வெளிக்காட்டியுள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஜே.பி பட்டம் கொடுக்கும் போது இவ்வாறான போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சிறைக்குச் சென்ற இந்த காவாலி அத்தானைப் போன்ற குற்றவாளிகளுக்கு எல்லாம் ஜே.பி பட்டம் கொடுக்கப்படுகின்றது என்றால் முன்னைய அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் கேவலமான நிலையில் செயற்படுகின்றதா?
இனி வரும் காலம் நல்லுார் பிரதேசசபையில் கஞ்சா கடத்தி பிடிபட்டு சிறைக்குப் போன தமிழரசுக்கட்சிக்காரனுக்கும் ஜே.பி பட்டம் கொடுக்கப்படவுள்ளதா?
அத்தான் என்று அழைக்கப்படும் யோகராசாவின் மகன் தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறைக்குள் உள்ளான். அவன் 20 கிராம் ஹேரோயின் கடத்திய வழக்கில் பிடிபட்டவன். அவனு்ககு மரணதண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தனது மகனின் பிணைக்கு கையெழுத்திட்டவனும் இந்த யோகராசாதான். அத்துடன் இவனுக்கும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவன் தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட பதிவுகளை இப்போது தந்துள்ளோம்.
யாழ் மாநகரசபை சைக்கிள் கட்சி உறுப்பினரான அத்தானின் காவாலி மகன் கத்தி, போதைப்பொருளுடன் கைது!!
போதைப்பொருள் கடத்தல்கார மகனின் அப்பா யாழ் மாநகசபை உறுப்பினர் அத்தான் கைது!!





