புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் கணவன் ரவீந்தரனும் மனைவியும் துாக்கில் தொங்கியது ஏன்?

திருக்கோவில் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர்.இன்று (21) செவ்வாய்கிழமை அவர்களது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துளள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதான மனோககரன் தேவதர்சன் மற்றும் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.குறித்த இருவருக்கும் 3 வருடத்திற்கு முன் திருமணமாகியதுடன் இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.