யாழில் விபத்தில் படுகாயமடந்து கிடந்த பிரதேசசெயலக கணக்காளர் துடிக்க துடிக்க வீடியோ எடுத்த பாவி யார்? வீடியோ
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும் சக உத்தியோகஸ்தரும் , மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்து மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவவத்தை வீடியோவாக எடுத்தமை தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளது.
எப்படியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலை கொண்டு செல்ல முயற்ச்சிக்காமல் வலியில் துடிப்பவர்களை வீடியோ எடுப்பது எப்படியான ஒரு மனநிலை. கேடு கெட்ட சமூகம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதவிட்டுள்ளார்கள்.

