புதினங்களின் சங்கமம்

ஜே.வி.பி அரசியல்வாதிகளுடன் ஜல்சா செய்ய பிரதேசசெயலாளர்களை துாண்டுகின்றாரா யாழ் அரச அதிபர் பிரதீபன்?

இலங்கையைத் தாக்கிய சூறாவழி யாழ்ப்பாணத்திற்கு அதிக சேதங்களை ஏற்படுத்தாது விலகியது. இந் நிலையில் யாழில் சூறாவளியால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பெருமளவு நிதி யாழிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் யாழ் பிரதேசசெயலக உயர் அதிகாரிகளின் கூட்டம் யாழ் அரச அதிபர் .பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. அக் கூட்டத்தில், உங்கள் பிரதேச செயலக ஆளுகைக்குட்பட்ட இடங்களில் வெள்ளப் பாதிப்பு குறைவாக இருந்தாலும் நீங்கள் அரசியல்வாதிகள் கூறுவதை கருத்தில் எடுத்து செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்களை எவ்வாறாவது சமாளித்துக் கொள்ளுங்கள் என கூறினாராம் யாழ் அரச அதிபர் பிரதீபன்.

யாழில் சில பிரதேசசெயலகங்களில் பெண் பிரதேசசெயலாளர்களும் கடமையாற்றுகின்றார்கள். பிரதீபன் கூறும்சமாளிப்புஎன்பது எந்தவகையைச் சேர்ந்தது?

பிரதீபனைப் போல யாழ்ப்பாணத்தில் எந்த அரசியல்வாதி வந்தாலும் அவர்களின் இஇஇஇஇ கழுவியாவது பதவியைத் தக்கவைப்பது போலவா? அல்லது கொரோனா காலத்தின் பின்னர் டக்ளஸ்தேவானந்தாவுடன் சேர்ந்து விஜிதா மில்காரனின் அரிசி கொமிசனில் தான் வாங்கிய பணத்தில் டக்ளசுக்கு 2 கோடி கொடுத்து டக்ளசை சமாளித்த போலவா? அல்லது தற்போதும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டாராவுக்கும் ஜே.வி.பி முக்கிய பிரமுகர்களுக்கும் கொழும்புக்கு யாழ்பபாணக் கருவாடு தொடங்கி கறுத்தக்கொழும்பான் மாம்பழம், கப்பல் வாழைப்பழங்களை வாகனங்களில் அனுப்பி லஞ்சம் கொடுப்பது போலவா? எவ்வாறான சமாளிப்பை யாழ்ப்பாண பிரதேசசெயலாளர்கள் செய்ய வேண்டும் என பிரதீபன் கருதுகின்றார்?

யாழ்ப்பாணதில் பாதிக்கப்பட்ட மக்களை விட MPP முக்கியஸ்தர்கள் கொடுக்கும் பட்டியலை மாத்திரம் கருத்தில் எடுக்கும்படியும் கூறப்பட்டுள்ளதாம். உதாரணமாக உடுவுில் பகுதியில் அண்ணளவாக ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உடுவில் MPP அமைப்பாளர் பட்டியல் ஒன்று கொடுத்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவ்வாறு பல இடங்களிலும் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்காது தமது பட்டியலில் உள்ளவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கு யாழ்ப்பாண MPP முக்கியஸ்தர்கள் முயன்று வருவதாகவும் அதற்காக தமக்கு குடை பிடிக்கும் யாழ்ப்பாண அரச அதிபரை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.