புதினங்களின் சங்கமம்

யாழில் இராணுவத்தினர் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!!

யாழ்.வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது.

நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

தாக்குதலின் பின்னர் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர் என தெரிவித்தள்ளனர்.