யாழில் குளத்தில் மூழ்கிப் பலியான சிலுசன்! சோகம் தாங்காது காதலியும் மரணம்!! கொலைகாரன் பொலிசா? லோயர் சுகாஸ் பரபரப்பு தகவல்! வீடியோ
கடந்த புதுவருட தினத்தில் வரணி சிட்டிவேரம் (சுட்டிபுரம்) பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய சிவராசு சிலுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள திம்புருவில் குளத்தில் நீராடியுள்ளனர். அவர்களுடன் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸ்காரன் ஒருவனும் இருந்து்ள்ளான்.
அப்போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், வரணி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்தார்.
குறித்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி அடுத்தநாள் அதிகாலை வீட்டில் உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் திட்டமிட்டே கொல்லப்பட்டதாக அந் நேரத்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். அந்த வழக்கு தொடர்பாக சட்டத்தரணி சுகாஸ் கூறும் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.

