வெளிநாட்டு பெண்ணுடன் முறைகேடாக நடந்தவருக்கு 28 ம் திகதி வரை விளக்கமறியல்
https://vampan.net/75206/
இலங்கைக்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து பெண்ணுடன் திருக்கோயில் பிரதேசத்தில் வைத்து அந்தரங்க உறுப்பைக் காட்டி முறைகேடாக நடந்து கொண்டதன் அடிப்படையில் மருதமுனையில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட பொகவந்தலாவையை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடி எருவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நபரை எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியயில் வைக்க பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று உத்தரவிட்டார். இதே வேளை குறித்த நபர் சிறைக்குச் செல்லும் போது கதறி அழுது கொண்டே சென்றதாக தெரியவருகின்றது.





