சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் ஒருவர் கைது!
சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 3கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

