யாழில் அதிகாலையில் நடந்த விபரீதம்! தீவிர விசாரணையில் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து உட்புகுந்த திருடர்கள் சுமார் 6 லட்சம் ரூபாய் பெறுமதியான கைதொலைபேசிகளை திருடி சென்றிருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கடையை உடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த தொலைபேசிகளில் 18 தொலைபேசிகளை களவாடிச் சென்றுள்ளார்கள். குறித்த விற்பனை நிலையத்தில் CCTV பொருத்தப்பட்டிருந்த நிலையில் முகத்தினை துணியால் மூடிக் கட்டியவாறு திருடர்கள் உள் நுழைந்துள்ளனர். கடையில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டு பொருட்களை களவாடியுள்ளனர்.
திருடர்கள்அங்கிருந்து வெளியேறும் சமயம் ஓர் துணியினால் தான் கையாண்ட பொருட்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கைவிரல் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவாறும் செயல்பட்டுள்ளார்கள்.
மேற்படி திருட்டு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்ட நிலையில் தடயவியல் நிபுண்கள் சகிதம் துரித விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

