யாழ் திருநகர்ப் பகுதியில் மின் ஒழுக்கினால் முற்றாக எரிந்து சிதைந்த வீடுகள்!! (video)
யாழ் சுண்டுக்குளி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள திருநகர்ப் பகுதியில் வீடு ஒன்று மின்னொழுக்கினால் முற்றாக எரிந்து சிதைந்துள்ளது. இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வீடு, மற்றும் உடைமைகளை இழந்து நிர்க்கதியாகி நின்ற இரண்டு குடும்பங்களுக்கு யாழ்ப்பாண பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் யாழ் பிரதேசசெயலாளரின் ஒழுங்கமைப்புடன் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளனர்.








