இன்று அதிகாலை டிப்பர் ஒன்று சங்குப்பிட்டி கடலில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கற்கள் ஏற்றி வந்து கொண்டிருந்தவேளை டிப்பர் சாரதியின் தூக்கக் கலக்கத்தால் இந்த விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவத்தில் சாரதி படுகாயமடைந்திருக்கலாம், எனவும் அவர்கள் தெரிவித்தனர்.





