சிங்கள இன கள்ளனுக்கு நடந்த கதி!! மரத்தில் கட்டப்பட்டு நையப்புடைக்கும் காட்சிகள்
நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து திருடும் கொள்ளையர்களால் மஹாபாகே பிரதேச மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பில் மஹாபாகே பொலிஸாருக்கு அறிவித்த போதும் எவ்வித பலனும் இல்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் இந்த கொள்ளை காரணமாக மஹபாகே பிரதேசத்தின் நாகொடை ஆனியகந்த வீதியின் வெலின்டன் பார்க் வீட்டுத் தொகுதி மக்கள் தற்போதைய நிலையில், தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாகொடை ஆனியகந்த வீதியின் வெலின்டன் பார்க் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளையிட நபர் ஒருவர் வந்துள்ள நிலையில், அந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது.
இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி ராகம பேரலந்த பிரதேசத்தில் பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த நபர் ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மஹாபாகே பொலிஸில் முறைப்பாடு செய்தாலும் பலன் இல்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

