சற்று முன் சாவகச்சேரி அனந்தன் சிதம்பரநாதன் லண்டனில் கொரோனாவுக்கு இரையாகிப் பலி!! (Photos)

சற்றுமுன் மேலும் ஒரு ஈழத் தமிழர் லண்டனில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்,

உலகை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் நோய்த் தாக்கத்தினால் லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ் – கச்சாய் வீதி, சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டன், குவீன்ஸ் பெரியில் வாழ்ந்து வந்தவருமான அனந்தன் சிதம்பரநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மைய நாட்களாக லண்டனில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்து வருவோரில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Image may contain: 1 person, glasses and close-up

error

Enjoy this blog? Please spread the word :)