வெளிநாட்டு விசரில் திரியும் வெங்காயங்களே!! இந்தப் பச்சைக் கள்ளனிடம் ஏமாற வேண்டாம்!!
SIMMIYON PHILIP ROY எனும் மோசடியாளர் தான் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சேர்ந்த பலரிடம் பண மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண கிளையில் 2025/10/22 ம் திகதி இன்றைய தினம் பணத்தை இழந்த இரு இளைஞர்களால் தனித்தனியாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்களால் கௌரவ பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பிரத்தியேக முறைப்பாடு பிரிவிலும் (TELL IGP) ல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்பதற்கு அப்பாவி போல் அமுல் பேபி போல் தெரியும் இந்த ROY என்பவன் இலங்கையின் பல பிரதேசங்களில் சென்று ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து அங்கு தான் தங்கி நின்று அப்பாவிகளை அங்கு வர சொல்லி உணவுகளை வாங்கி கொடுத்து தான் பெரிய ஏஜெண்ட் என கூறி ஏமாற்றி வருகிறான். இவனின் இந்த விஞ்ஞான ரீதியான செயற்பாட்டால் பலரும் ஏமாந்துள்ளனர்.
அத்துடன் இவருக்கு எதிராக பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
எனவே மேற்படி நபர் REALITY FUTURE PVT LMTD எனும் பெயரில் நிறுவனம் ஒன்றை நடாத்தி பணமோசடி செய்து வருவதாக தெரிகிறது. எனவே இவர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் இவரை யாழ்ப்பாணத்தில் கண்டால் இது தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறியத்தருமாறு கேட்டுக்கொள்ப்படுகின்றீர்கள்.



