புதினங்களின் சங்கமம்

தன்னிடம் சிகிச்சை பெறவந்த 42 வயது பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கிய வைத்தியரை தேடுகின்றது பொலிஸ்!!

சியம்பலாப்பே பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றில் சிகிச்சை பெற வந்த 42 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் வைத்தியரை கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.இந்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வல்லுறவுக்கு உட்படுத்திய வைத்தியரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.