புதினங்களின் சங்கமம்

கள்ளக்காதல்!! மனைவி திருந்திவிட்டாள் என நினைத்த கணவனுக்கு நடந்த கொடூரம்!!

இந்தியாவில் மனைவி வேறு ஆணுடன் இருப்பதை கணவன் பார்த்துவிட்டதால் அவரை இருவரும் சேர்ந்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் எமிகானுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமுடு. இவர் மனைவி ஜோதி.

இருவரும் பல வீடுகள் அருகருகில் அமைந்திருக்கும் காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் இதே காலனியில் வசித்து வந்த ராமா என்பவருடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதை ஜெயராமுடு மற்றும் அவர் குடும்பத்தார் கண்டுபிடித்த நிலையில் கிராம பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து ஊர் பெரியவர்கள் ஜோதி மற்றும் ராமாவை எச்சரித்து தொடர்பை விட்டுவிடும் படி கூறினர்.

இதற்கு இருவரும் ஒப்பு கொண்ட போதிலும் ஜோதி தனது தொடர்பை விடவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜெயராமுடு தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.

இதையடுத்து ஜோதி, ராமாவை தனது வீட்டுக்கு அழைத்த நிலையில் இருவரும் தனிமையில் இருந்தனர்.

அந்த சமயத்தில் ஜெயராமுடு வீட்டுக்குள் வந்த போது இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் ஊர் பஞ்சாயத்தில் இருவரையும் கையும் களவுமாக மாட்டிவிட வீட்டுக்குள் அவர்களை வைத்து பூட்ட முயன்றார்.

ஆனால் அதற்குள் சுதாரித்து கொண்ட ஜோதி கணவரின் கழுத்தை நெரிக்க, ராமா ஜெயராமுடுவை கட்டையால் தாக்கினார்.

ஆனால் இருவர் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து ஓடிய ஜெயராமுடு இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.