புதினங்களின் சங்கமம்

பகலில் பட்டதாரி ஆசிரியர் இரவில் பயங்கர கொள்ளையன்!! கொழும்பில் பிடிபட்டவனின் கதை இது!!

பகலில் பட்டதாரி ஆசிரியராகவும், சிறந்ததொரு சமூக சேவகராகவும் இனங்காணப்பட்ட நபர்
ஒருவர் இரவில் திருட்டுவேலைகளில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

குறித்த பட்டதாரி ஆசிரியர் கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள 21 விகாரைகளில்
கொள்ளையிட்டதாக கூறிய பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

3 பிள்ளைகளின் தந்தையான குறித்த பட்டதாரி ஆசிரியர் , கடந்த பல நாட்களாக கொழும்பிலுள்ள
ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் தங்கியிருந்தபோதே, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் யக்கல, மினுவாங்கொட பகுதிகளில் இடம்பெற்ற விகாரை திருட்டிலும் இவர்
தொடர்புபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நன்கு அறியப்பட்ட சமூக சேவகரான குறித்த ஆசிரியர் , தொண்டு பணிகளிற்கு தாராளமாக பணம்
செலவிட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆசிரியரை கைது செய்தபோது அவரிடம் 21 இலட்சம் பெறுமதியான நகை,மற்றும் 19
இலட்சம் பணம் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ரத்தெளுவ சிறி அமார விகாரையில் இவர் திருட்டில் ஈடுபட்டது, அருகிலுள்ள சிசிரிவி
கமராவில் பதிவாகியிருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சீதுவை பொலிசார் , ஆசிரிய
தொடர்ப்பில் சிஐடியினரிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தான் தேடப்படுவதை உணர்ந்த சந்தேகநபர், கொழும்பிலிருந்து தப்பிச் சென்று
மொரட்டுவ பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் மறைந்திருந்தபோதே பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.