யாழில் வேலை செய்த மகப்பேற்று நிபுணருக்கு குஞ்சாமணி இருக்குதா? என கேள்வி கேட்ட ரகுராம்!! பரபரப்பு வீடியோ!!
யாழ் உரும்பிராயில் ரகுராம் என்பவர் தன்னை சுதேச வைத்தியர் என கூறி ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளித்துவருகின்றார். இவர் ஒரு போலி வைத்தியர் என ஆங்கில வைத்தியர்கள் பொதுமக்களை தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றார்கள். குறித்த ரகுராமால் பல நோயாளிகள் இறந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றார்கள். ரகுராமுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் ஆங்கில மருத்துவர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்து ரகுராம் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் சிறு குழந்தைக்கு தலைக்குள் நீர் தேங்கியுள்ளதாகவும் அதனை அகற்ற அந்த குழந்தையின் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த குழந்தையின் பெற்றோர் அவ்வாறு செய்யாது அந்த குழந்தையை ரகுராமிடம் கொண்டு சென்றுள்ளார்கள். ரகுராம் அந்தக் குழந்தையை சத்திரசிகிச்சை இல்லாது தலைக்குள் இருக்கும் நீரை அகற்றியுள்ளதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணராக கடமையாற்றி தற்போது லண்டனில் வைத்தியத்துறையில் வேலை செய்யும் வைத்தியர் ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு, ரகுராமை கிண்டல் செய்திருந்தார்.
அதற்கு ரகுராம் அந்த வைத்தியரின் பதிவின் கீழ் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவும் இங்கு தந்துள்ளோம்.
மேலே உள்ள வீடியோவை தனது பேஸ்புக்கில் பதிவிட்ட மகப்பேற்று நிபுணர் கீழ் வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்…
ஆனாலும் மகப்பேற்று நிபுணராக இருக்கும் குறித்த ஆங்கில வைத்தியர் கூகிளை துணைக்கு எடுத்தே கருத்துத் தெரிவித்துள்ளது அவரது நிபுணத்துவத்தை தரக்குறைப்பு செய்வது போல் உள்ளதாக சமூகுவலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மகப்பேற்று நிபுணருக்கு பதிலடியாக அவரது பேஸ்புக் பக்கத்திலேயே போய் ரகுராம் குஞ்சுமணி தொடர்பாக கேட்ட கேள்விகள் கீழே தரப்பட்டுள்ளன.