வடக்கு மாகாணத்தில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு அரசஅதிபராக வரும் கனவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வடமாகாண மகளீர் அமைச்சின் செயலாளர் நந்தகோபன், அந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது போல் செயற்படும் தனது அமைச்சின் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் திட்டி ஏசுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பெண் உத்தியோகத்தர்களை மரியாமைக்குறைவாக என்னடி, வாடி, போடி என ஏசிவருகின்றாராம்.
அரச அதிபர் பதவியைக் குறிவைத்து NPP கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர்களைத் தொடர்பு கொண்டு, மகளீர் விவகார அமைச்சின் கீழ் வரும் உதவித்திட்டங்களுக்கான பெண் பயனாளிகளின் தெரிவினை NPP கட்சி முக்கியஸ்தர்களே தெரிவு செய்து தருமாறு கேட்டுள்ளாராம். இதனால் குழம்பிய குறித்த அமைச்சின் உத்தியோகத்தர்களை குறிப்பாக பெண்களை தகாத வார்த்தைகளால் ஏசிவருவதாகவும் தெரியவருகின்றது.
ஏற்கனவே தான் கடமையாற்றிய பிரதேசசெயலகம் ஒன்றின் விடுதியில் காணப்பட்ட தொலைக்காட்சியை தனது வீட்டுக்கு கொண்டு வந்தமை, வேலணை பிரதேசசெயலகத்தில் கடமையாற்றிய போது சின்னவீடு ஒன்றை ஒழுங்குபடுத்தியமை, உடுவில் பிரதேசசெயலகத்தில் கடமையாற்றிய போது படையினர்களுடன் சேர்ந்த குடித்துக் கும்மாளமிட்டமை போன்ற பல்வேறு அஜால் குஜால் செயற்பாடுகளை நந்தகோபன் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





