Vampan memesபுதினங்களின் சங்கமம்

வடமாகாண பிரதமசெயலாளர் யார்?? கொஞ்சம் பொறுங்கோ என்கின்றாராம் ஆளுநர்!!

வடமாகாண புதிய பிரதம செயலாளர் தேர்வில் தெய்வேந்திரம் முன்னணியிலாம்! கொஞ்சம் பொறுங்கள்
புதிய பட்டியல் தருகிறேன் ஆளுநர் அடம்பிடிப்பாம்..

வடமாகாண பிரதம செயலாளர் பதவிக்கான தேர்வில் வடமாணாத்தின் ஆளுநர் உள்ளிட்ட சிலர் தமக்கு
இசைந்தவர்களை நியமிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக உள் வீட்டு தகவல்கள்
தொிவிக்கின்றன.

மாகாண பிரதம செயலாளராக மூத்த நிர்வாக அதிகாரி தெய்வேந்திரத்தின் பெயர் ஜனாதிபதி
கோட்டபாய ராஜபக்ஸவின் கீழ் இயங்கும் உயர்மட்ட ஆலோசனை சபையின் தேர்வில் முதல் நிலையில்
உள்ளதாகவும்,

அதனை தொடர்ந்து மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன், முன்னாள் பிரதம செயலாளர்
ஒருவருடைய பெயரும் பட்டியலில் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளது. இதனை அறிந்த வடமாகாண
ஆளுநர் சாள்ஸ் தமக்கு இயைபானவர்களை நியமனம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், சில
பெயர்களை ஆளுநர் சிபார்சு செய்துள்ளதாகவும், தற்போதைய பிரதம செயலாளருக்கு சிறிது
கால சேவை நீடிப்பு பெற்றுக் கொடுக்கலாமா?

எனவும் முயற்சித்ததாகவும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில், கிளி.மாவட்ட அரசாங்க அதிபரை
நியமிக்க முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் புதிய பட்டியலுடன் ஆளுநர் கொழும்பில் உயர்
மட்டங்களிடம் சென்றுவருகிறாராம்.

குறித்த தகவல் மாகாணசபையில் தற்போது பேசு பொருளாக மாறியிருப்பதாகவும் உள் வீட்டுத்
தகவல்கள் தொிவிக்கின்றன.