உயர மதில்களை கட்டி றோலர் கேட்டுகளை அமைத்து திருவிளையாடல்கள்!! பொலிசார் கூறுவது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
நீர்கொழும்பு பொலிஸ் பிரதேசத்தில் 76,635 சிங்களவர்கள், 14,000 முஸ்லிம்கள், 9630 தமிழர்கள் ஏனையவர்கள் 1000 என 102,000 பேர்கள் வசிக்கின்றனர். இங்கு அச்சுறுத்தல்கள், குற்றச் செயல்கள் அதிகம் காணப்படுகின்றன. பாதுகாப்பும் அதிகம் தேவை. மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல்கள் கிடைப்பதில்லை. உங்கள் பக்கத்து வீடு, நீங்கள் வசிக்கும் வீதி, கிராமம் தொடர்பாக உங்களுக்கு அதிகம் தெரியும். வெளியிலிருந்து வருபவர்கள் யார்? எமக்கு அச்சுறுத்தலாக இருப்பது என்ன? என்பது பற்றிய தகவல்களை உங்களுக்கு தரமுடியும். இவ்வருடத்தில் நீர்கொழும்பில் 8 கொலைகள் இடம்பெற்றுள்ளன. 4 கிராமுக்கு குறைவான போதைப் பொருள் வழக்குகள் தினமும் 4-5 விசாரிக்கப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் எந்த நாளும் 4-5 பேர் சிறை வைக்கப்படுகின்றனர். நீர்கொழும்பில் போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கிறது. ஆரம்பத்தில் ஹெரோய்ன் பாவித்தார்கள் தற்போது ஐஸ் பாவிக்கிறார்கள். 10-15 அடி உயரத்திற்கு மதில்களை கட்டி றோலர் கேட்டுகளை அமைத்து வாழ்கிறார்கள். அங்கு என்ன நடைபெறுவது என்று பக்கத்து வீட்டாருக்குத் தெரியாது. இவை தொடர்பாகவும் நாம் கவனமாக இருக்கவேண்டும். சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக நாம் எடுக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கோ அல்லது அதற்கு பலவந்தம் செய்வதற்கோ இந்த அரசாங்கத்தில் யாரும் முன்வர மாட்டார்கள். அவசியமான செயல்களை சரியாக செய்து, சமூகத்தை சிறந்த முறையில் வழிநடாத்த முடியுமாக இருந்தால், அதுவே நாம் பெற்ற வெற்றியாகும் என்றார்.
– நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேரா –

