புதினங்களின் சங்கமம்

சீன வெடி கொழுத்தியது போல் அதி உச்ச பாதுகாப்பான நீதிமன்றில் சாதாரணமாக சுட்டு விட்டு தப்பிய போலிச் சட்டத்தரணி!! உட்கார்ந்து யோசித்து துவக்கை பதுக்கிய இடத்தை பார்த்தீகளா? வீடியோ

அதி உச்சப் பாதுகாப்பான பிரதேசமாக கருதப்படும் நீதிமன்றின் உள் ஒருவன் சட்டத்தரணி வேடம் போட்டுச் சென்று குற்றவாளி ஒருவனை மிகச் சாதாரணமாக கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வது என்பது சினிமாக் காட்சிகளில் மட்டும்தான் சாத்தியம் என நம்பி இருந்தவர்களுக்கு கொழும்பு நீதிமன்றில் இன்று நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குற்றவாளியைக் கொன்றுவிட்டு கொலை செய்தவன் தப்பிச் சென்ற விதம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குற்றவாளி உயிருடன் இருந்தால் பெரும் பெரும் புள்ளிகளின் பாதாள உலகச் செயற்பாடுகள் வெளிச்சத்திற்கு வரும் என்ற காரணத்தால் பொலிசாரின் ஆதரவுடனேயே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றாா்கள்.

வடிவேலு சொன்ன போல உட்கார்ந்து யோசிச்சு செய்யிறாங்களோ…. என்ற மாதிரி கைத் துப்பாக்கியை எவ்வாறு நீதிமன்றத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள் எனப் பாருங்கள்…

May be an image of digital audio player, phone and text

அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 5 நீதவான் நீதிமன்றில் இன்று காலை கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சட்டத்தரணி ஒருவரும் சட்டத்தரணி போல் வேடமணிந்த இருவர் வந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
வழக்குரைஞர் போல் வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் வெறுங்கையுடன் பிரவேசித்த நபர், பின்னர் குறித்த பெண்ணிடம் இருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கூண்டில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட 5 விசேட குழுக்களின் கீழ் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடாத்தியவர்கள் இவர்கள்தானாம்…

May be an image of 2 people and people smiling

அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 05 இல் இன்று காலை இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் உதவியாளரின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்ணின் பெயர் பின்புர தேவகே இஷார செவ்வந்தி வீரசிங்க எனவும் அவர் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

தற்போது டுபாயில் இருக்கும் மானுடினு பத்மசிறி பெரேரா என அழைக்கப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் இணைந்து கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது;

கனேமுல்ல சஞ்சீவ யார்? ஏன் நீதிமன்றத்துக்குள் வைத்து கொலை செய்யப்பட்டார்?
கனமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயட்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயட்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன.
*திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதானவர்.
சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான “பிளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்” ஆகியோரது அடியாளாக வெளியில் வருகின்றார்.
அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயட்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த (இவரும் பாதாள உலக உறுப்பினர்) தடையாக இருக்கிறார்.
எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயட்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார். ஆனால் சமிந்தவின் தம்பி ருவன் சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உற்பட்ட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர். ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார்.
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் இந்த சஞ்சீவ உற்பட அவரது குழு.
அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி போலீசார் வலைவீச ஆரம்பித்தனர். குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார்.
மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயட்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயட்சி செய்தார். அங்கே அவருக்கு தடையாக இருந்தவர்தான் ஒஸ்மான் என்பவர். 2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான “அஜா மற்றும் சூளா” என்பவரையே பாவித்தார்.
இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை. 30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2019 ஆண்டளவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவ அல்லது’ மாலிங்கமுவே சஞ்ஜீவ ‘ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் 2021 விடுவிக்கப்பட்டு இருந்தார்.

இறக்கும் வரையும் 39 கொலைகளைச் செய்துள்ள கனேமுல்ல சஞ்சீவ இன்று கொலைசெய்யப்பட்டமை பலருக்கு அதிர்ச்சியையும் பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் கடந்த யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் , ak 47 உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

மேற்படி வழக்கானது வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமையவே நடைபெற்று இருந்தது,,,

வேறொரு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டு இரகசியமாக வெளிநாடு சென்றார். வெளிநாடு சென்று 2 ஆண்டுகளில் 17 கொலைகளை தனது சகாக்கள் மூலம் செய்துள்ளார்,

சஞ்சீவ குமார சமரரத்ன என அழைக்கப்படும் இவர் 2023 செப்டம்பர் 13 காத்மண்டுவில் இருருந்து இலங்கை திரும்பும் போது கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்,

மனிதக் கொலைகள், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் முதலிய குற்றங்கள் இவர்மீது உள்ளன,,,

நான்கு மாதங்களுக்கு முன்னர் கூட பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைத்து சஞ்சீவ அவர்களீன் அதிநவீன தொலைபேசி ஒன்றை சிம் இல்லாது STF கைப்பற்றி இருந்தது.

இலங்கையில் மிகவும் ஆபத்தான நபர் இவர் என்று கணிக்கப்பட்டு சிறையீல் அடைக்கப்பட்டு இருந்தார், இது ஒரு பழிவாங்கல் கொலையாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. இவர் சிறையில் இருக்கும் போது கொழும்பு நகரில் சென்ற ஆண்டு நான்கு கொலைகள் நடைபெற்றது. தற்போதும் தொடர்ந்து பல கொலைகளை இவர் தனது சகாக்கள் மூலம் செய்து வந்தார்…..

இந்தக் கொலைக்கு கொலையாளி நவீன Pistol பாவிக்காமல் Classical Revolver பாவித்தமைக்கு காரணம் அதன் அழுத்தமான துல்லியம், எவ்வகையிலும் Technical Fault ஏற்படாத தன்மை. எனவே இந்தக் கொலையாளி நிச்சயம் பல கொலைகளைச் செய்த ஒரு Professional Assasin ஆகவே இருக்க வாய்ப்புள்ளது.

போதைப்பொருள் வியாபாரம், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றை பகிரங்கமாக செய்த இவர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.
இன்னுமொரு கொலைவழக்கு தொடர்பில் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 05 நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியம் வழங்கிக்கொண்டிருந்தார்.
குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த நிலையில்தான் சட்டத்தரணி வேடம் அணிந்த துப்பாக்கி தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர்.
எவ்வராயினும் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள். இங்கே அது நிறைவேறியுள்ளது. அதுதான் யதார்த்தம்.

May be an image of 1 person, studying and textMay be an image of wingtip shoesMay be an image of 5 peopleMay be an image of 4 people