புதினங்களின் சங்கமம்

யாழில் கள்ள உறுதி எழுதிய 4 பெண் சட்டத்தரணிகள் உட்பட 8 பேர் தலைமறைவு!! பொலிஸ் தேடுகின்றது!!

சட்டத்தரனி செலஸ்ரின், சட்டத்தரணி ஜெயக்காந்தன், சட்டத்தரணி சரோஜினி இளங்கோவன், சட்டத்தரணி கிருஸ்ணவதனி, சட்டத்தரணி கீர்த்தனா, சட்டத்தரணி நிவேதா, சட்டத்தரணி கௌதமன் மற்றுமொரு மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி விக்னராஜாஆகியோர் தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளதாகத் தெரியவருகின்றது. குடாநாட்டில் பல்வேறு காணி மோசடிகளில் கோடிக்கணக்கான பணத்தை பெற்ற சம்பவங்களில் இவர்கள் உள்ளதாக தெரியவந்ததையடுத்து இவர்களைக் கைது செய்ய பொலிசார் ஆயத்தமான வேளையில் இவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள அப்பாவிகளுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தரிசுக் காணிகள், இறந்தவர்களின் காணிகள், அடையாளம் வெளிப்படுத்த முடியாத காணிகளை வெளிப்படுத்தல் உறுதிகள் மற்றும் மோசடியான முறையில் உறுதிகள் தயாரித்து விற்ற கொள்ளைக்கும்பல்களுடன் இவர்கள் நெருங்கிச் செயற்பட்டு பல கோடி ரூபாக்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் ஜனாதிபதியாக காணப்பட்ட காலத்தில் குறித்த காணி மோசடிகள் தொடர்பாக இவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது குறித்த சட்டத்தரணிகள் அப்போதய வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் அம்மையாருடன் சேர்ந்து ஜனாதிபதியைச் சந்தித்து கைது நடவடிக்கையை நிறுத்தியிருந்தார்கள். தற்போது ஊழல் அற்ற ஆட்சி அமைந்துள்ள நிலையில் இவர்களைக் கைது செய்ய ஆயத்தமான போது இவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக பொலிஸ்தரப்பு மூலம் தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த காணிக் கொள்ளையர்களான சட்டத்தரணிகளுடன் முன்னாள் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீடாதிபதியாக செயற்பட்ட குருபரனும் சேர்ந்து செயற்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் குருபரன் தலைமையில் தற்போது குறித்த காணிக் கொள்ளையர்களான சட்டத்தரணிகள் கொழும்பில் உள்ள ஒரு இடத்தில் நிற்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடாக தம்மைக் கைது செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த முற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே காணி மோசடி வழக்கு ஒன்றில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு சார்பாக சுமந்திரன் யாழ் மேல்நீதிமன்றத்தில் ஆயராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.