புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்!! உயிர் துறந்த யோஜிதா!!

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூ.க்கிட்டு த.ற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த (05) ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவகுரு வீதி பெரியகல்லாறு பிரதேசத்தை சேர்ந்த சுதர்சன் யோஜிதா என்பவரே இவ்வாறு தூ.க்கிட்டு த.ற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த மாணவி உயர்தர வகுப்பில் கல்வி கற்று வரும் நிலையில் அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இக்காதலை நீண்ட நாட்களாக பெற்றார் எதிரிப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்ல இருந்த நிலையில் குறித்த மாணவி தனது வீட்டின் அறையினுள் சென்று தனக்குத்தானே தூக்கிட்ட சம்பவத்தை கண்ட தந்தை தூக்கிலிருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.