புதினங்களின் சங்கமம்

நண்பர்களின் திருவிளையாடல்!! யாழில் கணவனுக்கு கள்ளத் தொடர்பு என மனைவி தற்கொலை முயற்சி!!

 

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற அரச அதிகாரி ஒருவர் தனது மனைவியை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார். தென்னிலங்கையின் சுற்றுலா தளம் ஒன்றில் பிரபல ஹோட்டலில் வெளிநாட்டில் வசித்து வந்த நண்பன் ஒருவன் இலங்கைக்கு வந்து தனது நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அதில் கலந்து கொள்வதற்காக யாழிலிருந்து சில நண்பர்கள் சென்றுள்ளார்கள். இவர்களில் யாழில் உள்ள அரச அலுவலகத்தில் பதவிநிலை உத்தியோகத்தராக கடமையாற்றும் அலுவலரும் அடக்கம். குறித்த ஹோட்டலில் இவர்கள் கூடி குடித்து மகிழ்ந்துள்ளனர். குறித்த அரச அலுவலர் நிறை வெறியில் படுத்திருந்த போது பெண் போல் வேடம் போட்டு குறித்த அலுவலரை அரைகுறை உடையில் நிலையில் கட்டிப்பிடித்தபடி இன்னொரு நண்பன் போஸ்ட் கொடுக்க மற்றவர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை குறி்த்த அலுவலரின் மனைவியின் முகப்புத்தக உட்பெட்டிக்கு நகைச்சுவையாக நண்பர்களில் ஒருவர் அனுப்பியுள்ளார்.

அதனைப் பார்த்த மனைவி தனது கணவனுக்கு தொலைபேசியில் பல முறை தொடர்பு கொண்டும் பலனில்லாது போயுள்ளது. இதனையடுத்து தான் தற்கொலை செய்யப்போகின்றேன்.. உடனடியாக திரும்ப வரவும் எனவும் குறுஞ் செய்தி அனுப்பியும் கணவர் பதிலனுப்பவில்லை. நிறை வெறியில் இருந்த நண்பர்களும் இதனைக் கவனிக்கவில்லை. அடுத்த நாள் காலை கணவன் தனது தொலைபேசியைப் பரிசோதித்த போது மனைவியிடமிருந்தும் அயல்வீட்டாரிடமிருந்தும் நுாற்றுக்கணக்கான அழைப்புக்கள் வந்திருந்ததுடன் பல குறுந்தகவல்களும் வந்திருந்துள்ளது. அதனை வாசித்து அதிர்ச்சியடைந்த கணவர் மனைவிக்கு தொலைபேசி எடுத்த போது மனைவி தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்துள்ளது.

அவசரமாக யாழ் திரும்பிய கணவர் மனைவி தற்கொலை செய்ய முற்பட்ட காரணத்தை அறிந்து அதிர்ந்துள்ளார். மனைவிக்கு அனுப்பப்ட்ட புகைப்படங்களை பார்த்து தனது நண்பர்களின் விளையாட்டு தனது மனைவியின் உயிரைப் பறிக்க முற்பட்டதை அறிந்து திகைத்துள்ளார்.

மனைவி துாக்கில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது 8 வயது மகனும் அவனது தங்கையும் கத்தியதாலேயே அயல்வீட்டுக்காரர்கள் அவரை மீட்டகதையையும் அவர் அறிந்து நிலைமையை உணர்ந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் நண்பர்களை அழைத்து மனைவிக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்ததாகவும் மனைவி தற்கொலைக்கு முயன்றதை அறிந்த நண்பர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து மன்னிப்புக் கேட்டதாகவும் தெரியவருகின்றது.