புதினங்களின் சங்கமம்

பளை மருத்துவர் சிவரூபன் விடுவிக்கப்படுவாரா? அவரது நிலை என்ன? பொலிஸாரின் தகவல்

பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின்
அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏகே -47 தூப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120
புள்ளட்டுக்கள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன
கரந்தனில் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன்,
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத
விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை

கிளிநொச்சி பளை வைத்தியசாலை மருத்துவர் கந்தையா சிவரூபன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சிவரூபன் கடந்த வாரம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றச்சாட்டு அவருக்கெதிராக காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ஒருவாரமாகியும் இன்னும் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் பேச்சாளர்,

“அவர் மீதான விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸார் ஊடாக நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணை முடிந்த பின்னரே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்” எனவும் தெரிவித்தார்.