15 வயதுச் சிறுமிக்கு 32 வயது காமுன் செய்த அலங்கோலம்!! குறை மாத சிசு இறந்தது!!

கினிகத்தேன பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு பிறந்த குறைமாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் நோர்வூட் பகுதியில் இருந்து கினிகத்தேனவிற்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி குறைமாத சிசுவொன்றை பிரசவித்துள்ளதாகவும் அந்த சிசு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் கினிகத்தேன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் மற்றும் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)