புதினங்களின் சங்கமம்

யாழில் சங்கர்ராஜ் விதானையின் தம்பி சசிராஜ் செய்யும் செப்படி வித்தை!! பலர் பணத்தை பறிகொடுத்து அந்தரிப்பு!!

சமூகவலைத்தளம் மூலம் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

சங்கர்ராஜ் எனும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியும் கிராம சேவையாளரின் (J/130) சொந்த தம்பியான சசிராஜ் என்பவர் தனது அண்ணனான கிராம சேவையாளர் மூலமாக தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் விசேட விலைக்கழிவில் துவிச்சக்கரவண்டிகள் இருப்பதாக கூறி அதனை பெற்று தருவதாக கூறி நபர் ஒருவரிடமிருந்து 90 ஆயிரம் ரூபாயினை பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த கிராம சேவையாளரின் தம்பி இவரின் அண்ணனின் பெயரை பாவித்து அவரின் பூரண அனுசரணையுடன் இந்த மோசடிகளை செய்து வருவதாக ஊர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.மேலும் இவர்களினால் பாதிக்கப்பட்ட நபர் பண மோசடி தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த கிராமசேவையாளரின் தம்பி இது போல பல கதாபாத்திரங்களில் அதாவது (லீசிங் ஏஜெண்ட், வெளிநாடு அனுப்பும் முகவர்) போல நடித்து பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பாக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் பணத்தை இழந்தவர்கள் இவரது வீட்டிற்கு செல்லும் போது பக்கத்து வீடு மற்றும் அயலவர் மற்றும் கிராமமக்கள் ” தம்பி உங்களுக்கு என்னெண்டு சொல்லி பொல்ல போட்டவர்” எனக் கேட்கும் அளவிற்கு இவர் பிரபலமாகியுள்ளார்.
மேலும் இவரின் அண்ணனான கிராமசேவையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு பேசும் போதும் தனக்கு தெரியாது தம்பியிடம் கேளுங்கள் என கூறுகிறார்.எனவே இவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.