புதினங்களின் சங்கமம்

புத்தளத்தில் இரு பேருந்துக்கள் மோதுண்டு கோர விபத்து..!! படங்கள்

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதி அனுராதபுரம் – நொச்சியாகம – கொவிபொல சந்தியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 08 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.45 மணியளவில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து மற்றும் ஓர் தனியார் பேருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.