புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் வீதியால் சென்ற யுவதிக்கு அலங்கோலம் செய்த 2 காவாலிகள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ

முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்துள்ளார்.

Robbery in Mullaitivu

 கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டல்

இதன்போது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.

Robbery in Mullaitivu

சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Robbery in Mullaitivu

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர் சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Robbery in Mullaitivu