புதினங்களின் சங்கமம்

வவுனியா – செட்டிகுள பிரதேசத்திற்குட்பட்ட பெண்ணின் நூதன பண மோசடி!!

 

வவுனியா-செட்டிகுள பிரதேசத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் பெண் ஒருவர் நூதனமாக முறையில் அயல் வீட்டாருடன் உறவாடி சுமார் 6இலட்சத்திற்கு மேற்பட்ட பணம் மோசடி செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட கிராமத்தில் இப்பெண் வசித்து வந்துள்ளார் இப்பெண் வெளிநாடு சென்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊரிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் வெளிமாவட்ட ஒருவரை திருமணம் செய்து தனது அதாவது பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பின்னர் அயலவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் சிறு சிறு பணமாக குறிப்பாக 20000 தொடக்கம் 50000 வரை சுமார் 4 குடும்ப பெண்களிடம் 6இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை நூதனமாக வாங்கியுள்ளார். பின்னர் பிரபல நிறுவனத்திடம் மாதகட்டணம் மூலம் மடிக்கணினி மற்றும் சலவை இயந்திரம் போன்றவற்றை கொள்வனவு செய்துள்ளார். அந்நிறுவனத்திற்கு சுமார் 80000 ரூபாய் செலுத்தப்படவேண்டும் அத்தோடு கப்பெனியிடம் வாங்கிய மடிக்கணினியை பணம் கொடுக்க வேண்டிய பெண் ஒருவரிற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது அதாவது பெண் தனது கிராமத்தை விட்டு தனது கணவரின் இடத்தில் மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பெண்ணிற்கு பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த குடும்ப பெண்கள் கண்ணூருடன் எமது ஊடகத்திற்கு தெரிவித்தனர்.

ஒரு மாத காலத்திற்குள் பணம் திரும்பி செலுத்தாவிடில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும் என்று பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.