மகிந்தவின் மோதகமும் NPP யின் கொழுக்கட்டையும்!!
கடந்த காலங்களில் திறப்பு விழாக்களின் போது பொது நிதியை பயன்படுத்தி ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு அவர்களை கெளரவிக்க வேண்டும் என்பது எழுதபடாத விதியாக இருந்தது
ஜேவிபியின் அமைச்சர் திரு சந்திரசேகர் உட்பட்டோர் இந்த கலாச்சாரத்தை மாற்றியமைபதாக வாக்குறுதி வழங்கி இருந்தனர்.
ஆனால் இந்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டு திறப்பு விழாக்களில் ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என்கின்ற ஒற்றை காரணத்திற்காக அரச பணத்தில் மாலை மரியாதை மற்றும் கெளரவிப்புகள் தொடருகின்றன
புலம்பெயர் நயினாதீவு மக்கள், ஜெர்மனியின் செஞ்சிலுவைச் சங்க வாறன்டோர்ப் கிளை உட்பட்ட தனியார் அமைப்புகளின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட ரூபா 66 மில்லியன் பெறுமதியான நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடத்திற்கு அரச பொது நிதியில் திறப்பு விழா செய்கின்றார்கள்
சுகாதார கட்டமைப்புகளோடு எந்த தொடர்புமற்ற திரு சந்திரசேகர், திரு இளங்குமரன் உட்பட சகல ஜேவிபி உறுப்பினர்களும் மாலை மரியாதையோடு நிற்கின்றார்கள்
ஆனால் இதே நாட்டில் 180 இற்கு மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாட்டு தொடர்புவதாக சொல்லுகின்றார்கள்
குறிப்பாக வலி நிவாரணிகள் (Painkillers), Antibiotics, Hypertension மற்றும் Kidney உட்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றைக்குறை நிலவுதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது
உண்மையில் கட்டமைப்பு மாற்றங்களோடு அரசியல் கலாச்சார மாற்றங்களையும் சாத்தியமாக்காமால் வினைத்திறனான பொது நிதி பயன்பாட்டுக்கோ அல்லது நாட்டின் முன்னேறதிற்கோ எந்த வாய்ப்புமில்லை.
நன்றி
இனமொன்றின் குரல்

