புலம்பெயர் தமிழர்

புலமைப்பரிசில் பரீட்சை வினாக்களில் பல குழப்பமான வினாக்கள்!! ஆசிரிய சங்கம் குற்றச்சாட்டு!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில் பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல
வினாக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரித்துள்ளது.

“கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளில்,
பாட்டத்திட்டத்துடன் தொடர்பு படாத பல கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அந்த வினாத்தாளின் 6ஆவது கேள்வி, 3ஆம், 4ஆம் அல்லது 5ஆம் வகுப்பு
பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படாத விடயமாகும். அது 6ஆம் வகுப்பு கணிதப்பாடத்துடன்
தொடர்புடையது.

குறித்த பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணியின் போது இதுகுறித்து அவதானம்
செலுத்தவேண்டும்” என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.