புதினங்களின் சங்கமம்

தம்புள்ளை கோர விபத்தில் பெண்கள் உட்பட 3 பேர் பலி!!(Video)

தம்புள்ளை – ஹபரண வீதியின் குடாமீகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வேனில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவை, கதுருவெல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுனர் ஹபரண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபரண பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.