நாயை கட்டிவையுங்கோ எண்டாள்…. கட்டிப் பிடியுங்கோ எண்டேல!! கனடா தமிழனுக்கு நடந்த கதி!!
எப்பன் குனிஞ்சு மூஞ்சையை கிட்டவா கொண்டுவந்தியள் எண்டா நைசா நசுக்கிடாம உள்ளதை உள்ளபடி உங்கட காதுக்க சொல்லிப்போட்டு என்ர அலுவலை பாப்பன்.
எனக்கு உந்த நாயில எத்தினை வகை இருக்கு? அதில சாதி என்ன? கலர் என்ன? கண்ராவி என்ன? எண்டெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம்,
“நாயெண்டா கடிக்கும்…. அதுவும், ஆமான நாயிட்ட அம்பிட்டா உருட்டி உருட்டிக் கடிக்கும்”
அவ்வளவுதான்.
என்ர சின்னவயசில நாயோட என்ர அனுபவம் எப்பன் சரியில்லை. அந்த அதிர்ச்சில இருந்து 40 வருசமா இன்னும் நான் மீளேல்லை எண்டதுதான் உண்மை. ஒரு நாய் ஒரு மனிசரை ஒருக்கா கடிச்சதெண்டு கேள்விப்பட்டிருப்பியள். அதே நாய் அதே மனிசரை ரெண்டாம் தரமும் கடிச்சதெண்டும் கேள்விப்பட்டிருப்பியள். எங்கட பின்வீட்டு மாலாக்கா வீட்டு நாய்… (அந்த செம்படைக் கலர் நாயை பற்றித்தான் சொல்லுறன்). அந்த same நாய் என்னை 6 வருசத்துக்க ஒன்பது தரம் கடிச்சது ?. இது பப்ளிக் பிளேஸ் எண்டதால கடிச்ச இடங்களை என்னால துணிச்சலா சொல்ல முடியல. 2 தரம் அந்த நாய் கடிச்சதுக்கு ஊசி போட்டது. ஆனா அதிர்ஷ்டவசமா ஒரு ஏற்பூசி 4 வருசத்துக்கு வேலை செய்யுமாம் எண்ட அந்த “டாக்டரின் 4ஆம் விதி”ப்படி மிச்ச கடியளுக்கு ஊசி போடேல்லை?.
பொறுங்கோ! நாங்க கதை ருசியல out of city போய்ட்டம் என்ன??♂️
நாங்க மெய்ன் கதைக்கு வருவம்.
கனடாவில நாய் கலைச்சு யாரையும் கடிச்சதாம் எண்டு கேள்விப்பட்டிருக்க மாட்டியள். ஆனா என்னைக் கடிக்க வந்திச்சே ?.
போன கிழமை எங்கட வீட்டு வளவில ஒரு landscaping வேலை செஞ்சவை. மூண்டு வேலையாக்கள் வளவில நிண்டு வேலேயேக்க நானும் அவையோட சும்மா சுப்பவைசிங்ல நிண்டனான்.
அப்ப தான் வந்திச்சே???….
பாஞ்சு கொண்டு வந்திச்சே ???….
சத்தியமா நம்ப மாட்டீங்க…. மாலாக்கா வீட்டு அதே நாய் 30 வருசம் கழிச்சு மறுபிறவி எடுத்து வந்திச்சே ???….
வேலை செய்ய வந்தவங்கள் வளவை சுத்தியோட….
நான் குறுக்கால பாஞ்சு குழறிக் கொண்டோட…..
வீட்டைச் சுத்தி ஒரே குழறலும் ஆரவாரமும்… அப்பிடியே முந்தி ஊருக்க ஆமிக்காரன் வந்து நுழைஞ்சோண்ண வாற அதே அவலச் சத்தம்.
நான் பாஞ்சு porch side கட்டில ஏறி, தூணைக் கட்டிப்பிடிச்சு நிண்டு பாத்தன். ஆனா நாயின்ர சைஸுக்கு அது பாஞ்சுதெண்டா கண்டிப்பா என்ர இடுப்புவரை அதுக்கு எட்டும் எண்டு எனக்கு confirm ஆயிட்டு?. அங்க இருந்து கதவை நோக்கி பாஞ்சன் பாருங்க. திறந்த கதவுக்க spider man மாதிரி எப்பிடி பாஞ்சன் எண்டு எனக்கே தெரியாது.
வெளில நிண்டவங்கள் வீட்டைச் சுத்தி ஓடுறாங்கள்….. ஓடுறாங்கள்…. நானும் அவங்களை வீட்டுக்க வாங்கோ எண்டு கத்தியும் அவங்களுக்கு அது கேக்கேல்லை. பிக்கானோட நிண்டவன் ஒருத்தன் அனுமன் சிலை மாதிரி அசையாம நிக்கிறான். ஆடாம அசையாம நிண்டா சிலையெண்டு நாய் நினைக்குமாம் எண்டது அவன்ர ட்ரிக். மற்றவன் வேலிக் கம்பில ஏறிட்டான். இன்னொருத்தன் ஓடியோடி 911க்கு அடிச்சா எனக்கு அண்டைக்குத்தான் தெரியும் 911உம் “call waiting”ல அஞ்சு நிமிசமா கிடக்கும் எண்டது ?. யாரோ ஒருத்தி அந்தப் பக்கம் திடீரெண்டு எடுத்து answer பண்ண இவனோ நாய்க்கதையை விட்டுட்டு callஐ எடுக்காததுக்கு அவளை அவளின்ர தாயில தொடங்கித் திட்டுறான். அவள் எல்லாத்தையும் வடிவா கேட்டுட்டு, “நாய்ப்பிரச்சினைக்கு நாங்கள் இல்லை… நீங்க 311க்கு அடியுங்கோ” எண்டுட்டு வெச்சிட்டாள். இங்க மரதன் ஓட்டத்தில நிண்டவனுக்கு 311 எப்பிடி அடிச்சானோ தெரியா. இன்னொருத்தி 311 லைன்ல உடன எடுத்தாள். எல்லாற்ற மரண ஓலமும் வடிவா போனுக்கால அவளுக்கு கேட்டிருக்கும் I’m sure. அந்த சனியன் சொல்லிச்சு பாருங்கோ ஒரு வார்த்தை…. ஆயுளுக்கும் மறக்க மாட்டன்.
“நாயை கவனமா பிடிச்சு கட்டி வையுங்கோ! அரை மணித்தியாலத்துக்க எங்கட ஆக்கள் வருவினம்”
ஆனாலும் அவள் நல்லவள்தான்…
Because,
நாயை கட்டிவையுங்கோ எண்டாள்…. கட்டிப் பிடியுங்கோ எண்டேல ❤️?♂️
நன்றி….
Ranjith Thavaraja பேஸ்புக்
பேஸ்புக்
